Janu / 2025 டிசெம்பர் 11 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெலிவேரிய பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி ஐஸ் போதைப் பொருளை கொடுத்து 21 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த 6 பேரை கைது செய்வதற்கான விசாரணைகளை வெலிவேரிய பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகமும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் மேற்கொண்டுள்ளனர்.
வெலிவேரிய பொலிஸ் நிலையத்திற்கு கடந்த 8 ஆம் திகதி இரவு 10 மணியளவில் வந்த பெண் ஒருவர் சுய நினைவின்றி கீழே விழுந்துள்ளார். பின்னர் பெண் பொலிஸ் அதிகாரிகள் இணைந்து குறித்த பெண்ணின் முகத்தில் தண்ணீர் தெளித்த பின்னர் அவள் சுயநினைவுக்கு வந்து சிறிது நேரம் ஓய்வெடுத்துள்ளார்.
குறித்த பெண் பேலியகொடை பிரதேசத்தில் உள்ள இளைஞன் ஒருவனுடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதுடன், காதலன் குறித்த பெண்ணை வெலிவேரிய பகுதியில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
பின்னர் குறித்த இளைஞன் தனது நண்பர்கள் சிலரையும் குறித்த அறைக்கு வரவழைத்து கட்டாயப்படுத்தி ஐஸ் குடிக்க வைத்து, மயக்கமடைந்த பிறகு பாலியல் வன்கொடுமை செய்ததாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளான குறித்த பெண் வைத்திய பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025