2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அடுத்தவாரம் சமர்ப்பிப்பு

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 01 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த வாரத்துக்கான சபையமர்வு, ஐந்து நாள்களும் இடம்பெறும். அதற்கான தீர்மானம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அ​பேவர்தன தலைமையில், நேற்று (30) கூடிய கட்சித்தலைவர்களின் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது. இதன்பிரகாரம் ஒக்​டோபர் 4ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரையிலும் சபையமர்வு நடைபெறும்.

இதேவேளை, 2022ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 04ஆம் திகதி திங்கட்கிழமை முழு நாளும் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கான விசேட பாராளுமன்ற அமர்வு தினமாக ஒதுக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் இதுவரை
பாராளுமன்றத்தில் கேட்கப்படாத வாய்மூல விடைக்களுக்கான 40 கேள்விகளுக்காக முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 4.30 வரையான நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

ஒக்டோபர் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை 2021ஆம் ஆண்டு நடுப்பகுதியின் நிதி நிலைமைகள் தொடர்பான அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறும்.

செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய தினங்களில் பிற்பகல் 4.50 மணி முதல் 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைக்கு மீதான விவாதத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை தவிர ஏனைய இரண்டு நாள்களும் Parliament of Sri Lanka @ParliamentLK @slparliament Parliament of Sri Lanka எதிர்க்கட்சியினரால் சபை ஒத்திவைப்பு வேளை மீதான விவாதம் நடத்தப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .