Editorial / 2026 மே 17 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர்ப் பகுதியில், ‘ஐஸ்’ மற்றும் ‘ஹெரோயின்’ ஆகிய போதைப்பொருட்களைக் கடத்தி விநியோகித்த சந்தேக நபர்கள் இருவர் அக்கரைப்பற்று (தம்பட்டை) விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கைது நடவடிக்கை இன்று இரவு இடம்பெற்றுள்ளது.
பொதுமக்கள் வழங்கிய இரகசியத் தகவலுக்கு அமைவாக, அக்கரைப்பற்று (தம்பட்டை) விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது, வீடொன்றில் வைத்து குறித்த இரு சந்தேக நபர்களும் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்கள் 30 மற்றும் 50 வயதுடைய, நிந்தவூர் பகுதியைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் நீண்டகாலமாக இப்பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும், இவர்கள் ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் எனப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து 40 கிராம் ‘ஐஸ்’, 60 கிராம் ‘ஹெரோயின்’ மற்றும் கைத்தொலைபேசிகள் என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதான சந்தேக நபர்களையும், மீட்கப்பட்ட பொருட்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நிந்தவூர் பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.





3 minute ago
13 minute ago
25 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
13 minute ago
25 minute ago
32 minute ago