2025 ஜூலை 05, சனிக்கிழமை

நம்பிக்கை பிரேரணை விவாதம் 12 ஆம் திகதி

Editorial   / 2018 டிசெம்பர் 07 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய  தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில்,  நம்பிக்கை பிரேரணை ஒன்றை நாடாளுமன்ற பொதுச் செயலாளரிடம் கையளித்துள்ளதாக, ஐக்கிய தேசிய முன்னணி எம்.பி க்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கமைய, குறித்த பிரேரணை மீதான விவாதத்தை எதிர்வரும் புதன்கிழமை (12), நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச குறித்த பிரேரணை கையளித்துள்ளாரென தெரிவிக்கப்படுகிறது.

தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்டதன் பின்னர், ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கும்  நிலைப்பாட்டில், ஐக்கிய தேசிய முன்னணியினர் ஒன்றிணைந்து செயற்படுகின்றனரென, ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .