Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது நல்லிணக்கம் குறித்து கருத்து பகிர்ந்துகொள்ளப்பட்டது.
நாட்டில் நல்லிணக்கத்தை அடைவதற்கு அரசாங்கம் ஆர்வத்துடன் உள்ளதாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த காலத்தைக் கவனித்து, எதிர்காலத்தை நோக்கி அனைத்துச் சமூகங்களுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இரு பிரதமர்களும் சந்தித்ததன் பின்னர் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை சகல துறைகளிலும் அபிவிருத்தியடையும் என நம்புகிறோம் என்பதுடன் இலங்;கைத் தமிழர்களுக்கு கௌரவம், செழிப்பு மிக்க வாழ்க்கை கிடைக்கும் அத்துடன், இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுவதற்காக இந்திய அசை முடியாத ஆதரவளிக்கும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .