2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

நளினி, முருகனின் போராட்டம் தொடர்கிறது

Editorial   / 2019 பெப்ரவரி 14 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம், இன்றும் தொடர்கின்றது.

28 வருடங்களாகச் சிறை தண்டனை அனுபவித்து வரும் தங்களை விடுதலை செய்யுமாறு கோரியே, இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், நளினி உட்பட எழுவரை விடுவிப்பதற்கானத் தீர்மானத்தை, ஆளுநர் எடுக்க முடியும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது.

ஆனால், இவ்விடயத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இதுவரை தீர்மானம் எதையும் எடுக்கவில்லை. இந்நிலையில், நளினியின் கணவரான முருகன், வேலூர் ஆண்கள் சிறையில், கடந்த 2ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றார். அவருக்கு ஆதரவாக, கடந்த சனிக்கிழமை முதல், நளினியும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

28 வருடங்களாகச் சிறைவாசம் அனுபவித்துவரும் தங்களை விடுதலை செய்யுமாறும், உண்மையைக் கண்டறிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்துள்ள அவர்கள், அவ்வாறு இல்லாவிடின், தம்மை கருணைக் கொலை செய்ய அனுமதி வழங்கவேண்டுமென்று கடந்த ஜனவரி
மாதம் 10ஆம் திகதி முருகன் ஆளுநரை கடிதம் மூலம் கோரினார்.

அதற்குப் பதில் கிடைக்காத நிலையிலேயே> கடந்த 2ஆம் திகதி முதல் முருகன் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

அதற்கமைய இன்று 13ஆவது நாளாக முருகனின் போராட்டம் தொடர்ந்த அதேவேளை, நளினியின் போராட்டம் 3ஆவது நாளாகத் தொடர்ந்தது. உண்ணாவிரதமிருக்கும் நளினியின் உடல் நிலை மோசமடைந்துள்ளது எனவும், அவர் சிகிச்சை பெற மறுத்து வருகின்றார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .