Freelancer / 2026 ஜனவரி 03 , பி.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவகமுவ, கொரதொட்ட , மெனிக்காரா பகுதியில் நேற்று (02) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன.
அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், கொரதொட்ட ,மெனிக்காரா பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த மூவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய இருவரும் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காயமடைந்த மூவரும் புது வருட கொண்டாவத்திற்காக மதுபானம் அருந்திக்கொண்டிருந்த போதே இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் பொரள்ளையைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஆவார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் அம்பலாங்கொடை மற்றும் தெமட்டகொடை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மில்லிமீற்றர் 9 ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “வனாத்தே சத்துவா” என்பவரின் சகாக்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “வனாத்தே சத்துவா” என்பவரின் சகாக்கள் 5 பேரில் மூவர் பொரள்ளை சஹஸ்புர பிரதேசத்தில் வைத்து சுட்டுக்கொலைசெய்யப்பட்டு ஏனைய இருவரும் காயமடைந்த சம்பவத்துக்கு பழிவாங்கும் நோக்கத்தில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். R
6 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago