2026 ஜனவரி 05, திங்கட்கிழமை

ஒரு ஷூ ஜோடியின் விலை 8 லட்சம் ரூபாயா?

Editorial   / 2026 ஜனவரி 04 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக வலைதளங்களில் சொகுசு மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் குறித்த வீடியோக்கள் அடிக்கடி பகிரப்பட்டு வரும் நிலையில், சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான காலணிகள் குறித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், நபர் ஒருவர் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலை உயர்ந்த காலணிகளை ஒரு சூட்கேஸில் வைத்துத் திறந்து காட்டுகிறார்.

அந்த காலணிகள் சாதாரணமானவை அல்ல என்றும், உலகம் முழுவதும் வெறும் 8000 ஜோடிகள் மட்டுமே தயாரிக்கப்பட்ட மிகவும் அரிதான வகை என்றும் அவர் குறிப்பிடுகிறார். காலணிகளின் வடிவமைப்பு மாறாமல் இருக்க அதன் கயிறுகள் தனியாகப் பேக் செய்யப்பட்டுள்ளன. இதைப் பார்த்த சமூக வலைதளப் பயனர்கள், இவ்வளவு பெரிய தொகையில் ஒரு சொகுசு காரையே வாங்கிவிடலாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .