2025 மே 09, வெள்ளிக்கிழமை

நவம்பர் 13 இல் வரவு செலவுத் திட்ட உரை

Freelancer   / 2023 செப்டெம்பர் 27 , மு.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

2024 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 13ம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு உரை நிகழ்த்தப்படவுள்ளது.

அத்துடன், இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது என  நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிடிய தெரிவித்துள்ளார்.

2 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அத்துடன், 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் தொடர்பான மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 22 முதல் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X