2025 ஜூலை 07, திங்கட்கிழமை

நாடாளுமன்றத்தி்ல் குழப்பம்; ஆராய விசேட குழு

Editorial   / 2018 நவம்பர் 30 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகேஸ்வரி விஜயனந்தன்

நாடாளுமன்றத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பில் ஆராய்வதற்கு, விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.

நாடாளுமன்றம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், நேற்று (29) முற்பகல் 10.30 மணிக்கு ஆரம்பமான போதான சபாநாயகர் உரையின் போதே, மேற்கண்ட அறிவிப்பு விடுக்கப்பட்டது.

கடந்த 15, 16ஆம் திகதிகளில், நாடாளுமன்றத்தில் கடும் குழப்பநிலை ஏற்பட்டிருந்த நிலையில், இதன்போது, நாடாளுமன்றத்தின் பல சொத்துகளும் சேதமடைந்தன. எனவே, இது தொடர்பில் பொலிஸார் பல கட்ட விசாரணைகளை தற்சமயம் முன்னெடுத்து வருவதுடன், குறித்த விசாரணையை விரிவுப்படுத்த, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் 6 பேர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.

குறித்த குழுவில், முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷ, ரஞ்சித் மத்தும பண்டார, பிமல் ரத்நாயக்க, மாவை சேனாதிராஜா, சந்திரசிறி கஜதீர ஆகியோர் உள்ளடங்கவதாகவும், சபாநாயகர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .