2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

நாடாளுமன்றத்துக்கு வருமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு

Editorial   / 2018 நவம்பர் 18 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளைய தினம் நாடாளுமன்றம் கூடும் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்துக்கு வருகைத் தந்து, ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டுமென, இலங்கை ​தேசிய இயக்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த அமைப்பின் தலைவர் சட்டத்தரணி சிந்தக வீரகோன் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது நாடளுமன்றத்தில் தோன்றியுள்ள சிக்கல் நிலையை ஜனாதிபதியால் மாத்திரமே தீர்க்க முடியும் என்றும் இலங்கை ​தேசிய இயக்கத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் நாடாளுமன்றத்தில் உரிய முறையில் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து, வாக்கெடுப்பை நடத்த உறுப்பினர்களுக்கு அதிகாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .