2025 ஜூலை 05, சனிக்கிழமை

நாடாளுமன்றத்தை கலைத்தமை சட்டவிரோதமானது நீதிமன்றம் அறிவிப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 13 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நவம்பர் மாதம் 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்லும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி, அதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான இறுதித் தீர்ப்பு சற்று முன்னர் வெளியானது.

பிரதம நீதியரசர் நலின் பெரேரா தலைமையிலான எழுவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதற்கமைய, ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்து வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்டவிரோதமானதென, உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

உயர்நீதிமன்ற தீர்ப்பு மாலை 4 மணிக்கு வழங்கப்படுமென குறிப்பிடப்பட்டிருந்த போதிலும். நீதியரசர்கள் உரிய நேரத்துக்கு வருகைத்தராத காரணத்தால் காலதாமதம் ஏற்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள், பதாதைகள ஏந்தியவாறு நீதிமன்ற வளாகத்தில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும் கோஷமிட்டு பெரும் ஆரவாரங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .