2025 ஜூலை 17, வியாழக்கிழமை

’நாடாளுமன்றத்தை கூட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Editorial   / 2020 ஏப்ரல் 24 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய சூழலில் நீதித்துறையின் ஆலோசனைகளை பெறமுடியாத நிலையில் உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

அறிக்கை ஒன்றை விடுத்து அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு நாடாளுமன்றம் மீள கூட்டப்படுமானால், அதனை ஒகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை முன்னெடுத்துச் செல்லக்கூடிய இயலுமை காணப்படுவதாகவும் அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தற்போதைய நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெருபான்மை பலத்தை பெற்று அதனை தொடர்ந்தும் ஆறு வருடங்களுக்கு நடத்தி செல்ல முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சந்தர்ப்பங்கள் இருக்கும்போது, நாடாளுமன்றத்தை மீள கூட்டமாட்டோம் என அடம் பிடிப்பது விதண்டாவாதமாகும் என, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தன்னால் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டப்போவதில்லை என ஜனாதிபதி விடாப்பிடியாக இருப்பது, ஜனநாயக பண்புகளுக்கு முற்றிலும் விரோதமானது எனவும் அரவிந்தகுமார் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X