2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘நாடாளுமன்றம் தொடர்பில் கதைக்க வெட்கப்படுகின்றேன் ’

Editorial   / 2019 ஜனவரி 09 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய நாடாளுமன்றத்துக்குள் ஒழுக்கம் கலாசாரம் இல்லையென்றும், நாடாளுமன்ற நிலைமைகள் தொடர்பில் கதைப்பதற்கு வெட்கப்படுவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று கரந்தெனிய மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தானும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் நாடாளுமன்ற நிலைகள் குறித்து வெட்கப்படுவதாகவும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் பிக் மெச் முடிவடைந்து இரு ஆண்கள் பாடசாலை அணியினர் நடந்துக்கொள்வதுப் போன்று இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாம் இந்தத் தவறுகளை மறைக்கக் கூடாது. எமது நாடு ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியாகக் காணப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .