2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

நாடு முடங்குமா? முடங்காதா? இறுதி முடிவு நா​ளை நண்பகல்

Editorial   / 2021 ஓகஸ்ட் 19 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டை முழுமையாக முடக்குவதா? இல்லை தற்போது அமுலில் இருக்கும் கட்டுப்பாடுகளை இன்னுமின்னும் இறுக்கமாக்குவதா? என்பது தொடர்பிலான இறுதித் தீர்மானம், நாளை வௌ்ளிக்கிழமை எடுக்கப்படக்கூடுமெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி கோட்டாயபய ராஜபக்ஷ தலைமையில், கொவிட்-19 செயலணி, ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் கூடும். அந்த வகையில், நாளைக்கும் அந்த செயலணி கூடவுள்ளது.

இதன்​போது சுகாதார தரப்பினரால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளுக்கு அமையவே, அடுத்தக்கட்டத் தீர்மானங்கள் எட்டப்படவுள்ளன.

ஆகக் குறைந்தது மூன்று வாரங்களுக்கு நாட்டை முடக்குமாறு அரசாங்கத்தின் பங்காளிகட்சிகளில் பத்து கட்சிகள், ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தன.

இந்நிலையில், கொரோனாத் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக ஊரடங்குச் சட்டத்தை பிறப்பிக்குமாறு மற்றுமொரு பங்காளியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இன்றையதினம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X