2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘நாட்டில் சுதந்திரம் இன்மையால் தேசிய தினமாக மாற்றம்’

Editorial   / 2019 பெப்ரவரி 03 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் சுதந்திரம் இன்மையால், சுதந்திர தினம் தேசிய தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று கண்டி​யில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்வளவு நாளும் சுதந்திர தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வந்த தினம் இம்முறை சுதந்திர தினமா, தேசிய தினமா என தெரியாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளை அதிகரித்துக்கொள்வதற்காக, தேசிய அசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்று மக்களை ஏமாற்றாமல், அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்​கொள்வதற்காக, அரசமைப்பை திருத்த வேண்டுமென்றால் அது சிறந்தது என்றும் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .