2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

நாட்டில் பல மாகாணங்களில் இன்று பலத்த மழை பெய்யும்

Editorial   / 2018 டிசெம்பர் 05 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள  கீழ் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக, நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாள்களுக்கும் தொடரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

இதன்படி வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதோடு, ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், மத்திய, கிழக்கு, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவான  மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதோடு,  இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் குறித்த மாகாகணங்களில்  தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடுமென்றும், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு, இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட கீழ் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக, ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் ஊடாக திருகோணமலை வரையான ஆழம் கூடிய கடற்பரப்புகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவ​துடன், நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோமீற்றர் வரை காணப்படுமென்றும், கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடற்பிரதேசங்கள் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படுமென  வளிமண்டலவியல் திணைக்களத்தால் இன்று (05) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .