2025 ஜூலை 12, சனிக்கிழமை

நாட்டு மக்களின் பேராதரவைப் பெற்றவரே பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்

Editorial   / 2018 ஒக்டோபர் 30 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு பொருளாதார ரீதியில் பாதாளத்தை நோக்கி சென்றுக் கொண்டிருப்பதால், அதிலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் மீட்பதற்காக, நாட்டுக்கு பாரிய சேவையாற்றிய,  அனுபவமிக்க ஒருவரான மஹிந்தவை பிரதமராக ஜனாதிபதி தெரிவு செய்துள்ளாரென நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவருமான சாந்த பண்டார தெரிவித்தார்.

மருதானையில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்​கொண்டப் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துரைத்த அவர்,

நாட்டின் இக்கட்டான நிலை​மையில் புதிய பிரதமர் ஒருவரைத் தெரிவு செய்வதை விட, நாட்டை பாதுகாக்கும் ஒருவரையே ஜனாதிபதி பிரதமராகத் தெரிவு செய்துள்ளாரெனவும், மிக முக்கியமாக இந்த நாட்டு மக்களின் பேராதரவைப் பெற்ற ஒருவரைத் தான் பிரதமராக ஜனாதிபதி தெரிவு செய்துள்ளதாகவும் சாந்த பண்டார தெரிவித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .