2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நாட்டை திறந்தாலும் ரயில்கள் இயங்காது

Freelancer   / 2021 செப்டெம்பர் 29 , பி.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், இரண்டு வாரங்களுக்குள் எந்த ரயில்களும் இயக்கப்பட மாட்டாது என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

அடுத்த இரண்டு வாரங்களுக்கு மாகாணங்களுக்கு இடையே பஸ்கள் இயக்குவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்ட அவர், சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஒக்டோபர் 1 முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்ட பின்னர், வழமை போல மாகாணங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X