Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2025 ஜூன் 29 , மு.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போதுள்ள கட்டமைப்பிற்குள் சீர்திருத்தங்களை மேற்கொள்வதை விட, நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம்
என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
கடந்த அரசியல் கலாசாரத்தை மாற்றம் செய்து தற்போதைய அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கல் என்றவகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அது நிலையானதாக உருவாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
நாட்டின் அனைத்து துறைகளையும் புதிய நிலைக்கு உயர்த்தவும் இதேபோன்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
ஜனாதிபதி வலியுறுத்தினார்.
நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதற்காக செயல்படுத்தப்படும் திட்டத்தில் பொது போக்குவரத்து சேவையை வலுப்படுத்துவதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது என்றும், சிறிய அரசாங்கங்களுக்கும் தனிப்பட்ட அதிகார வர்க்கத்தினர்களுக்கும் தங்கள் விருப்பப்படி போக்குவரத்து சட்டங்களை செயல்படுத்த அனுமதிக்கப்படாது என்றும், வலுவான போக்குவரத்து சட்ட முறையை அறிமுகப்படுத்தி செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
அதேசமயம் பொதுச் சொத்துக்கள் திருடப்படுவதைப் பற்றி
ஒரு சமூகமாக நாம் அஞ்ச வேண்டும் என்றும், அனைவரும் சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் நடைபெற்ற ‘Dream Destination’ 100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, தினமும் சுமார் எட்டு பேர் வீதி விபத்துகளில் உயிரிழப்பதாக புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துவதாக மேலும் சுட்டிக்காட்டினார்.
வலுவான போக்குவரத்து சட்ட கட்டமைப்பின் ஊடாக,வீதி விபத்துகளைத் தடுக்கவும், போக்குவரத்து நெரிசலைத் தடுக்கவும், நச்சு வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கவும், வாகன இறக்குமதிக்காக செலவிடும் அரசாங்கத்தின் பாரிய செலவைக் குறைக்கவும் உதவும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
16 minute ago
25 minute ago
1 hours ago