2025 ஜூலை 07, திங்கட்கிழமை

‘நான் இணையமாட்டேன்’

Editorial   / 2019 ஜனவரி 28 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

யார் என்ன சொன்னாலும், தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்காக, தான் ஒருபோதும் இணையமாட்டேன் எனத் தெரிவித்த அநுராதபுர நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன, அவ்வாறான ஆட்சியொன்றின் ஆயுட்காலம் நான்கு வருடங்களில் நிறைவடைந்துவிட்டன என்றும் தெரிவித்தார்.

அநுராதபுரம் குருந்தன் குளத்திலுள்ள தன்னுடைய வாசஸ்தலத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஏற்படுத்திய நல்லாட்சி, தோல்வியடைந்ததன் காரணமாகவே, சுதந்திரக் கட்சியிலிருந்து தான் விலகி, குறைபாடுகளை ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவந்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியிடம் மட்டுமன்றி, பிரதமரிடமும் முகத்துக்கு முகம் தெரிவித்தேன், பிணைமுறிகள் தொடர்பில் தெரிவித்தேன், ஏற்பட்டிருந்த சகல பிரச்சினைகளையும் எடுத்துரைத்தேன் என்று தெரிவித்த அவர், ஊடகங்கள் என்னசொன்னாலும், இவர்களுடன் இணைந்து, தேசிய அரசாங்கமொன்றை உருவாக்கமுடியுமென நான் நினைக்கவில்லை என்றார்.

அவ்வாறு செய்தால், அது மக்களுக்குச் செய்கின்ற மிகமோசமான துரோகமாகுமெனத் தெரிவித்த அவர், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து, எதிர்கால நடவடிக்கைகளை மிகநேர்த்தியாக முன்னெடுத்துச் செல்கின்றன என்றும் கூறினார்.

இதேவேளை, சுதந்திரக் கட்சியின் வடமத்திய மாகாண முன்னாள் அமைச்சர் சுசில் குணரத்ன, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து, தன்னுடைய அங்கத்து​வத்தைப் பெற்றுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .