2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

‘நான் விளையாடுவேன்’

Editorial   / 2018 டிசெம்பர் 31 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்‌ஷவின் இரண்டாவது புதல்வர் யோஷித்த ராஜபக்‌ஷ, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.  

அண்மையில் இடம்பெற்ற றகர் போட்டியொன்றில் பங்கேற்றிருந்த அவர், விபத்தொன்றுக்கு முகங்கொடுத்திருந்தார். அவருடைய முகம் மற்றும் நெஞ்சுப்பகுதி ஆகியன கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருந்தன எனவும் அதனையடுத்தே அவருக்கு சத்திரசிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றும் அறியமுடிகின்றது.  

அவருடைய முகத்துக்கு, இரும்புத்துண்டுகள் பயன்படுத்தப்பட்டு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதென அறியமுடிகின்ற அதேவேளை, றகர் விளையாட்டுகளில் இனியும் விளையாடவேண்டாமென, அவருக்கு சத்திரசிகிச்சையை மேற்கொண்ட வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது. 

இந்நிலையில், மஹிந்த ராஜபக்‌ஷவின் மற்றுமொரு புதல்வரான ரோஹித்த ராஜபக்‌ஷவின் திருமணம், தங்காலையில் எதிர்வரும் 24ஆம் திகதியன்று இடம்பெறவிருக்கின்றது. அதற்கான ஏற்பாடுகளும் மிகப் பிரமாண்டமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.  

இதேவேளை, “சத்திரசிகிச்சைக்கு தான் முகங்கொடுத்திருந்தாலும், இன்னும் சில நாள்களில், றகர் போட்டியில் பங்கேற்பேன்” என தன்னுடைய டுவிட்டர் கணக்கில், யோசித்த ராஜபக்‌ஷ பதிவிட்டுள்ளார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .