Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 டிசெம்பர் 22 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியா வைத்தியசாலையில் நாய் ஒன்று வாயு துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டது.
வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே இந்த நாயை, வியாழக்கிழமை (19) இவ்வாறு சுட்டுக் கொலை செய்துள்ளார்.
வைத்தியசாலையின் பிரேத அறையருக்கில் நின்ற நாய் மீது பாதுகாப்பு உத்தியோகத்தர் தன்னிடம் இருந்த வாயு துப்பாக்கியை பயன்படுத்தி சுட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனால் காயமடைந்த நாய் இரத்தம் சிந்தி இழுபட்டு சென்று வேலி ஓரமாக மரணித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக நாய் காப்பகம் ஒன்றை நடத்தி வருபவர் வைத்தியசாலை பணிப்பாளரிடம் வெள்ளிக்கிழமை (20) முறைப்பாடு செய்துள்ளார்.
இது குறித்த விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பணிப்பாளர் இதன்போது உறுதியளித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .