Editorial / 2023 ஜனவரி 03 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாயை வளர்த்த வெளிநாட்டு பிரஜை ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரான்ஸ் நாட்டு பிரஜையே (வயது 84) அளுத்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதுகாப்பற்ற முறையில் நாயை வளர்த்த குற்றச்சாட்டின் கீழே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
அளுத்கம, களுவாமோதர பிரதேசத்தில் மூவர் உள்ளிட்ட ஐவரை, சுதந்திரமாக திரிந்து வந்து கடித்த அந்த நாய், நீர்வெறுப்பு நோய்த் தொற்றுக்கு உள்ளான நிலையில் மரணமடைந்துவிட்டது.
சந்தேகநபர் க்ரேடன் வகையைச் சேர்ந்த 6 வயதான பெண் நாயொன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த நாய், வீட்டிலிருந்து கடந்த 23அம் திகதியன்று தப்பியோடி ஐவரை கடித்துள்ளது. அத்துடன் வீட்டு நாய்கள் மூன்றையும் கடித்து குதறியுள்ளது.
அவ்வாறு கடித்து குதறப்பட்ட நாய்களில் இரண்டு மரணித்துவிட்டன எனத் தெரிவித்த அளுத்கம பொலிஸார், பாதுகாப்பற்ற முறையில் நாயை வளர்த்த குற்றச்சாட்டின் கீழே, வெளிநாட்டு பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார் அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
36 minute ago
47 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
47 minute ago
54 minute ago
1 hours ago