Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Freelancer / 2021 ஓகஸ்ட் 16 , பி.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
கல்முனைப் பிராந்தியத்தில் அண்மைக் காலமாக நாய்க் குட்டிகளுக்கு 'பார்வோ' வைரஸ் நோய் மிகத் திவீரமாகப் பரவிவருகிறது.
குறிப்பாக தடுப்பூசி ஏற்றப்படாத வளர்ப்பு நாய்க் குட்டிகளுக்கே இப் 'பார்வோ' வைரஸ் நோய் வேகமாகப் பரவிவருகிறது.
இது தொடர்பில் கால்நடை வைத்திய நிபுணர் டொக்டர் பி.மயூரன் தெரிவிக்கையில்,
பார்வோ ஒரு தொற்று 'டிஎன்ஏ' வைரஸ் ஆகும். இது பொதுவாக இளம் மற்றும் தடுப்பூசி போடப்படாத நாய்களில் கடுமையான நோயை ஏற்படுத்துகிறது.
இது முதன்மையாக உடலின் வேகமாகப் பிரியும் உயிரணுக்களை பாதிக்கிறது. அதாவது குடல் பாதை மற்றும் எலும்பு மச்சை மிக மோசமாக பாதிக்கப்படுகிறது.
நாய்க்குட்டிகள் மற்றும் இளம் பருவ நாய்களில் பர்வோவைரஸ் மிகவும் பொதுவானது என்றாலும் அது வயது வந்த அல்லது மூத்த நாய்களைப் பாதிக்கலாம் குறிப்பாக அவை தடுப்பூசி போடப்படாவிட்டால்.
ஒரு நாய் முழுமையாக தடுப்பூசியாக கருதப்படுவதற்கு ஒரு வயதில் பூஸ்டர் தடுப்பூசி பெற வேண்டும். நாய்கள் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் தடுப்பூசிகளைப் பெற வேண்டும்.
பொதுவாக 'பார்வோ' வைரஸ் என்ற ஒருவகை நோய் இக்காலப்பகுதியில் தடுப்பூசி ஏற்றப்படாத குட்டிநாய்களுக்கு ஏற்படுவது வழமையாகும். உண்மையில் நாய்களுக்கு 42 நாட்களில் முதலாவது தடுப்பூசி ஏற்றப்படவேண்டும்.
வளர்ப்பாளர்கள் நாய்களிடையே வாந்தி வயிற்றுப்போக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கண்டவுடன் உடனடியாக வைத்தியரிடம் கொண்டு செல்லவேண்டும்.
இப்படி நோய் அறிகுறிகளைக் காட்டும் நாய்க்குட்டிகள் உணவு உட்கொள்ளாமல் வாந்தி எடுத்த வண்ணமிருக்கும். அவற்றுக்கு எந்தக் காரணம் கொண்டும் தண்ணீர் பருகக் கொடுக்கக்கூடாது.
ஜஸ்கட்டி மட்டும் அரைமணி நேரத்துக்கு ஒருதடவை தேன்தடவி கொடுத்தல் நலம். எவ்வாறாயினும் உடனடியாக வைத்தியரை நாடிச் சிகிச்சை பெறுவதுதான் சிறந்தது.
இதைத்தடுப்பதற்கான ஒரேவழி தடுப்பூசி ஏற்றுவதுதான். ஆனால் பார்வோ நோயிருக்கும்போது தடுப்பூசி ஏற்றமுடியாது. கொரோனா போலத்தான் இதுவும்.
இப்பிராந்தியத்தில் குறிப்பாக காரைதீவில்தான் இந்நோய் ஆரம்பமாகின்றது. தொடர்ந்து ஏனைய பிரதேசங்களுக்கும் பரவிவருகிறது.
உரியவேளையில் வைத்திய சிகிச்சை பெற்றால் நாய்க் குட்டிகளைக் காப்பாற்றலாம் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
29 minute ago
29 minute ago
32 minute ago