2026 ஏப்ரல் 22, புதன்கிழமை

நாளை எம்.பி ஆகிறார் ரத்ன தேரர்

Nirosh   / 2021 ஜனவரி 04 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளைய (05)  பாராளுமன்ற அமர்வில்,  பாராளுமன்ற உறுப்பினராக அத்துரலிய ரத்ன தேரர் பதவிப்பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளார்.

எங்கள் மக்கள் சக்தி கட்சிக்குக் கடந்தப் பொதுத்தேர்தலில் கிடைத்த தேசியப் பட்டியலூடாக ரத்ன தேரர்  பாராளுமன்றத்துக்கு வரவுள்ளார்.

களுத்துறை மாவட்ட எம்.பியாக 2004ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட ரத்ன தேரர், 2010ஆம் ஆண்டும்  பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். 2015ஆம் ஆண்டும் இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தேசியப்பட்டியல்  பாராளுமன்ற உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .