Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 04 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பா.நிரோஸ்
தனக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த சுங்கத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், தனக்கு வழங்கப்பட்டிருக்கும் இடமாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இதற்கு எதிராகச் சட்டநடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தெரிவித்தார். அவரது இடமாற்றம் தொடர்பாக எழுந்திருக்கும் சர்ச்சைகள் தொடர்பில் தமிழ் மிரருக்கு நேற்று (03) தெரிவித்த அவர், “என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை” என்றார்.
சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக இருந்த பி.எஸ்.எம்.சார்ள்ஸ், திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு, முன்னாள் கடற்படை அதிகாரியான றியர் அட்மிரல் ஷேர்மல் பெர்ணான்டோவை அப்பதவிக்கு நியமிக்க, நிதியமைச்சுப் பணித்திருந்தது. எனினும், இந்த நியமனத்துக்கு அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன. சுங்கத் திணைக்களத்தின் சுங்க ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒன்றியம், கடந்த மாதம் 29ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு வருகிறது. முன்னாள் கடற்படை அதிகாரியின் நியமனம் வாபஸ் பெறப்பட்ட போதிலும், இன்னொருவர் புதிதாக நியமிக்கப்பட்டாரே தவிர, பி.எஸ்.எம். சார்ள்ஸ், மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கவில்லை.
இது தொடர்பில் தமிழ் மிரருக்குக் கருத்துத் தெரிவித்த பி.எஸ்.எம்.சார்ள்ஸ், “என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. உரிய அறிவுறுத்தல்கள் எதுவுமின்றி, சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவியிலிருந்து நிதி அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறேன்” என்றார்.
தன்னுடைய இந்தத் திடீர் இடமாற்றம், பல சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது எனத் தெரிவித்த அவர், “சுங்கத் திணைக்களம், கடல் போன்றது. சட்டவிரோதமான கடத்தல்கள், வியாபாரங்கள் என அனைத்தும், சுங்கத் திணைக்களத்தினூடாகவே இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பில், எனக்குக் கீழுள்ள அதிகாரிகளே விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான நிலையிலேயே, திடீரென நான் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளேன்” எனத் தெரிவித்தார்.
நிதி அமைச்சுடன் தொடர்புடைய வர்த்தகர்கள் இருவரால், தனக்குக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது எனத் தெரிவித்த அவர், இது தொடர்பிலும், தனது திடீர் இடமாற்றம் தொடர்பாகவும் சட்டநடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக, இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago
7 hours ago