R.Maheshwary / 2020 டிசெம்பர் 14 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
அட்டளுகம பிரதேசத்திலிருந்து தப்பி வந்து, பாணந்துறை பஸ் நிலையத்தில் நிலக்கடலை விற்ற நபர் ஒருவர், இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த மாதம் 11ஆம் திகதி குறித்த நபர் கைதுசெய்யப்பட்டு, பிசிஆர் பரிசோதனைகளின் பின்னர், இவரைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை பாணந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர் அட்டளுகம-ஜயகொடிகந்த பிரதேசத்தைச் சேர்;ந்த, 33 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தறையிலிருந்து கொழும்பு வரை பயணிக்கும் தூர சேவை பஸ்ஸில் , நிலக்கடலை விற்பதாக புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய, குறித்த நபர்,11ஆம் திகதி அதிகாலை அட்டுளுகம பிரதேசத்திலிருந்து சட்டவிரோதமாக நகருக்கு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
44 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026