Editorial / 2021 செப்டெம்பர் 05 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாக வசிப்பீர்களாயின் இதனை கொஞ்சம் கவனிக்கவும்.
20 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தும் செயற்றிட்டம் நாளை (06) முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.
கொழும்பு-01 முதல் கொழும்பு-15 வரையிலும் வசிக்கும் மேலே குறிப்பிட்ட வயதுக்கு இடைப்பட்ட சகலரும் இந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும்.
2001 ஆம் ஆண்டு பிறந்தவராக இருத்தல் அவசியம். காலை 9 மணிமுதல் மாலை 3 மணிவரையிலும் தடுப்பூசிகள் ஏற்றப்படும் ஆகையால், எவ்விதமான அச்சமும் இன்றி, தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளுமாறு கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.
தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதால் எவ்விதமான அச்சமும் இன்றி, அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவித்துள்ளது.
தடுப்பூசிகளை ஏற்றும் செயற்பாடுகள் சுகததாஸ உள்ளக அரங்கு, ஜிந்துப்பிட்டி பொது சுகாதார அலுவலகம், ஃபோர்ப்ஸ் வீதி சமூகநல நிலையம், கெம்பல் பார்க், சாலிக்கா மைதானம், ரொக்ஸி கார்டென் ஆகிய இடங்களிலேயே முன்னெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .