2025 மே 03, சனிக்கிழமை

நீதவானை அச்சுறுத்தியவர்களுக்கு விளக்கமறியல்

ஆர்.மகேஸ்வரி   / 2017 டிசெம்பர் 26 , பி.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் நீதவான் நீதிபதி சரவண ராஜாவை ​அச்சுறுத்திய சந்தேகநபர்கள் மூவரினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 3ஆம் திகதி வரை இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கெக்கிராவ பதில் நீதவான் நீதிபதி ரவீந்திர பண்டார இன்று (26) உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர்கள் மூவரும் மரதங்கடவெல பிரதேசத்தில் வைத்து நீதவான் பயணித்த காரை வழிமறித்து அவரை மிரட்டும் வகையில் நடந்துக்கொண்டமை தொடர்பில் நீதவான் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது​செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X