2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு

Janu   / 2024 ஓகஸ்ட் 29 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார்  மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக கொழும்பில் ஒட்டப்பட்ட அனாமதேய சுவரொட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய கோரியும் மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் வியாழக்கிழமை (29) அன்று பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர்.

நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில் எவ்வித வழக்கு விசாரனைகளுக்கும் சமூகமளிக்காது பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர்.இதன் காரணமாக அனைத்து வழக்கு விசாரனைகள் பிரிதொரு தினத்திற்கு தவணை இடப்பட்டுள்ளது.

மேலும் மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தினால் குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து , வெள்ளிக்கிழமை (30) அன்று அடையாள பணிப்பகிஷ்கரிப்பு மற்றும் ஊடக சந்திப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி  இ.கயஸ்பெல்டானோ தெரிவித்தார்.

எஸ்.ஆர்.லெம்பேட்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X