2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

“நீதிமன்ற கட்டமைப்பு டிஜிட்டல் மயமாகும்”

R.Tharaniya   / 2025 ஜூலை 31 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதும் நீதிமன்ற கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்குவதை விரைவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகப் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, வியாழக்கிழமை (31) அன்று தெரிவித்தார்.

நீதி நிர்வாகத்தில் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட முறைகளைப் பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் வலியுறுத்தினார்.

இலங்கையின் 49ஆவது பிரதம நீதியரசரை வரவேற்கும் சம்பிரதாய நிகழ்வு, உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் கலந்து​கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்மொழியப்பட்ட டிஜிட்டல் மயமாக்கல் முயற்சி தொடர்பாக இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தின் (BASL) தலைவருடன் ஏற்கனவே பலமுறை கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அதற்கு மேலதிகமாக, டிஜிட்டல் முறையை செயல்படுத்துவது குறித்து விவாதிக்க நீதி அமைச்சர் மற்றும் நீதி அமைச்சின் செயலாளருடன் சந்திப்புகளை நடத்தியுள்ளதாகவும், இதை நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கிறது என்றும் அவர் கூறினார்.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதம நீதியரசருக்கு, உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் நீதியரசர்கள், மேல் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் நீதவான் நீதிமன்றங்களின் நீதிபதிகள் குழு, சம்பிரதாய அமர்வில் அன்பான வரவேற்பு அளித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .