2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

Freelancer   / 2023 செப்டெம்பர் 12 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்றில் எதிர் வரும் 14 ஆம் திகதி வியாழக்கிழமை ஆஜராகுமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகராதலிங்கத்திற்கு முல்லைத்தீவு பொலிஸார் ஊடாக நீதிமன்ற அழைப்பானை வழங்கப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு மாவட்டம் குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையையும் மீறி பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டிருந்த நிலையில் பூசை வழிபாடுகளுக்காக சென்ற பௌத்த குருமாரின் வழிபாட்டுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அவமானப்படுத்திய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சில பிக்குகள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். 

அந்த முறைப்பாட்டுக்கமைவாக முல்லைத்தீவு பொலிசார் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்திருந்தனர்.

 அந்த வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், செல்வராசா கஜேந்திரன் உட்பட பலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு வழக்கு தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில் முதன் முதலாக பாராளுமன்ற உறுப்பினருக்கு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரொசேரியன் லம்பெட்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X