2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

நீராடச் சென்ற இளைஞன் பலி

Editorial   / 2018 நவம்பர் 18 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

நலங்கன நீர்வீழ்ச்சிக்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர்  உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று(17) பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் யட்டியந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த, 22 வயதுடைய  இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் உட்பட ஆறு பேர் சேர்ந்து, நலங்கன நீர்வீழ்ச்சிக்கு நேற்று மாலை குளிக்கச் சென்றிருந்த வேளையில், குறித்த இளைஞன் நின்று கொண்டிருந்த கல்லிலிருந்து கால் வழுக்கி  விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனின் சடலம், கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் பிரதே பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .