Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 ஜூலை 24 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு, பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் புதன்கிழமை (24) இடம்பெறவுள்ள நிலையில் பூசகர் உள்ளிட பக்தர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை (23) அன்று கோவிலுக்கு பொலிஸ்,இராணுவம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினரால் கோவில் பணிக்காக வருகை தந்த பூசாரி உள்ளிட்டவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதுதொடர்பில் ஆலய பூசகர் ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கையில்,
" நாங்கள் பொங்கல் வழிபாடுகளை செய்துக்கொண்டிருந்த வேளையில் பொலிஸ் , இராணுவம் மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் விசாரனைகள் நடாத்தினர் .
அது தொடர்பாக கேட்டபோது, நாங்கள் சிவன் சிலை பிரதிஷ்டை செய்வதாகவும் அது பல கோடி பெறுமதி எனவும் ஒரு வதந்தி கதையை பரப்பியுள்ளார்கள்.
இந்த வதந்தி பரப்பியவர்களை நாம் எப்படி சொல்வதென்று தெரியவில்லை, நாங்கள் அப்படியான நிலையில் ஆலயத்தை வழிநடத்தவில்லை , எங்களுடைய மூல மூர்த்தியாக இருக்கும் விநாயகப்பெருமானை நாங்கள் மென்மேலும் வழிபட்டு வருகின்றோம். அவருடைய அருள் இருக்குமென்பதை சகல மக்களுக்கும் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.
எந்தவொரு சிலைபிரதிஷ்டை செய்வது வேறு எந்த விதமான நிலைமையும் நடைபெறமாட்டாது. தயவுசெய்து இவ்வதந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்பதை ஆலய பூசகர் என்ற வகையில் தெரியப்படுத்த விரும்புகின்றேன்." என்றார்
அத்தோடு செவ்வாய்க்கிழமை (24) அன்று பொங்கல் உற்சவம் சிறப்பாக இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் தென்பகுதியை சேர்ந்த பலர் முகநூலில் வதந்தி பரப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் .
சண்முகம் தவசீலன்
27 minute ago
33 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
33 minute ago
1 hours ago