Editorial / 2023 ஜூன் 04 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கிய இரண்டு சம்பவங்களில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
தெஹியத்தகண்டிய, ஹெனானிகல வெவாவில் மூழ்கி 19 வயதுடைய இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
நான்கு பேர் ஒரு குழுவுடன் நீராடச் சென்றபோது அலையில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அவர்களில் இருவர் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காலி ஹபராதுவ பிரதேசத்தில் வசிக்கும் இரு இளைஞர்களே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், மொனராகலை கும்புக்கன் ஓயாவில் மூழ்கி 17 வயதுடைய பாடசாலை மாணவன் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. உறவினர்களுடன் நீராடச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
4 minute ago
32 minute ago
55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
32 minute ago
55 minute ago
2 hours ago