2025 ஜூலை 05, சனிக்கிழமை

நீர்கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

Editorial   / 2019 பெப்ரவரி 12 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் நீர்கொழும்பு தேர்தல் தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து  ரொயிஸ் பெர்ணான்டோவை நீக்கி,நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தனவை அப்பதவிக்கு நியமித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (12) நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ரொயிஸ் பெர்ணான்டோவை முன்னறிவித்தலின்றி நீக்கியமை தொடர்பாக, கட்சி ஆதரவாளர்கள்ஆர்ப்பாட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், பேரணியாக வந்து நீர்கொழும்பு பிரதான வீதியில் கல்கத்தை சந்தியில்  நின்று கோஷங்களை எழுப்பினர்.

ஜனாதிபதி தேர்தல், மாகாண சபைத் தேர்தல், பொதுத் தேர்தல் ஆகியவற்றில் நீர்கொழும்பு தேர்தல் தொகுதியை வெற்றி பெறச் செய்ததில், ரொயிஸ் பெர்ணான்டோவுக்கு பெரும் பங்கு உண்டெனவும் அவர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .