2025 ஜூலை 05, சனிக்கிழமை

நீர்கொழும்பு சிறைக்கு ரணில் விஜயம்

Editorial   / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான் 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று(18) காலை 10.30 மணியளவில், நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு விஜயம் செய்தார்.

இதன்போது, நீர்கொழும்பு சிறைச்சாலையில்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, ஐக்கிய தேசியக் கட்சியின், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், நீர்கொழும்பு மாநகர சபையின் முன்னாள்  எதிர்கட்சித் தலைவருமான ரொயிஸ்  விஜித்த பெர்ணான்டோ, ஐக்கிய தேசியக் கட்சியின் சிலாபம் அமைப்பாளரும்  புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சாந்த அபேசேகர ஆகியோரை பார்வையிட்டுள்ளார்.

இதேவேளை, சிறைச்சாலைக்கு விஜயம் செய்த ரணில் விக்கிரமசிங்க,  சிறைச்சாலை வாயிலில்  செய்தி சேகரிப்பதற்காக காத்துநின்ற ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .