Editorial / 2021 ஏப்ரல் 12 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
பீகாரின் பாட்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 48 வயதான சுன்னு குமார், ஏப்ரல் 3ஆம் திகதியன்று அனுமதிக்கப்பட்டார். கொரோனா பாதிப்புகளால் அவர் உயிரிழந்து விட்டாரென அவரது உறவினர்களிடம் நேற்று முன்தினம் (11) தெரிவிக்கப்பட்டது.
அதன்பின் தகனமேடைக்கு உடலை எடுத்துச் சென்ற உறவினர்கள் இறுதியாக அவரது முகத்தை பார்த்துள்ளனர். அதில், வேறொருவரின் முகம் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட உடல், வேறொருவருடையது என அதன் பின்னர்தான் தெரிய வந்தது.
தேடிபார்த்து விசாரித்த போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுன்னு குமார், அங்கேயே இருந்துள்ளார் எனினும், மரணமடைந்த மற்றொரு நோயாளியின் உடலை அவரது குடும்பத்தினரிடம் வைத்தியசாலை நிர்வாகம் ஒப்படைத்துள்ளதென தெரியவந்தது.
இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள், வைத்தியசாலையில் நிர்வாகத்துக்கு எதிராக போர்க்கொடி தொடுத்தனர். இதனையடுத்து, உரியவரின் சடலம் கையளிக்கப்பட்டது.
“இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் ஐ.எஸ். தாக்குர் கூறியுள்ளார்.
இதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர், இறந்துவிட்டாரென எழுத்துமூலமாக உறவினர்களிடம் வைத்தியர் அறிவித்த போதிலும், இறுதியில் அவர் உயிருடன் இருப்பது, கண்டறியப்பட்ட சம்பவமொன்று, இலங்கையிலுள்ள நீர்கொழும்பில், சனிக்கிழமை (10) இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago