Freelancer / 2021 செப்டெம்பர் 11 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாவட்டத்தில் மிக வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் ஒரு சில பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவுகளில் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நுவரெலியா மாவட்டத்திலுள்ள 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் - 19 தடுப்புக்கான தடுப்பூசி ஏற்றும் பணி இன்று ஆரம்பமானது.
சீன தயாரிப்பான சினோபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் இன்று முதல் இவர்களுக்கு ஏற்றப்படுகின்றது.
பாடசாலைகளிலும், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களிலும் ஏனைய சில நிலையங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அந்த வகையில், 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சைனோபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தும் பணிகள் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
இதனை பெற்றுக்கொள்வதற்காக அதிகளவிலான இளைஞர்களும், யுவதிகளும் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசியை பெற்றுக் கொண்டனர்.






1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago