2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

நுவரெலியாவில் சனக்கூட்டம்

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 11 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


டி.சந்ரு

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தாலும், நுவரெலியா நகரத்துக்கு நேற்று (10) வெள்ளிக்கிழமை பெருந்திரளான மக்கள் வருகைதந்திருந்தனர். வாகன நிறுத்துமிடங்களிலும் இட நெரிசல் காணப்பட்டது.



நுவரெலியாவிலுள்ள அரச தனியார் வங்கிகள் நேற்று(10) காலை 9 மணி முதல் ஒரு மணி வரையும் ஒரு சில வங்கிகள் பிற்பகல் 3 மணி வரைக்கும் திறந்து வைக்கப் பட்டிருந்தன.
நுவரெலியா பிரதான தாபாலகமும் நேற்று காலை 9 மணி முதல்  ஒரு மணி வரை திறந்து வைக்கப்பட்டிருந்தது.

முதியோர் கொடுப்பனவு வழங்கப்பட்டது. அத்துடன் பதிவு தபால்களும் மின்சார கட்டணமும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.சில சில்லறை கடைகளும் சதொசவும் திறந்திருந்தன, இதனால் நகருக்கு வருகைதந்திருந்த மக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களைக் கொள்வனவுச் செய்துகொண்டு சென்றமையையும் அவதானிக்க முடிந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X