2025 மே 01, வியாழக்கிழமை

’நெருக்கடியை தீருங்கள்’ மன்றாடுகிறது மன்றம்

Freelancer   / 2021 ஓகஸ்ட் 17 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட அனைத்து பிரதான வைத்தியசாலைகளிலும் கொரோனா தொற்றுக்கு உள்ளாவோரால் ஏற்படும் நெரிசல் காரணமாக வைத்தியசாலை அமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை நிவர்த்தி செய்ய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் மன்றத்தின் செயலாளர் டொக்டர் கமல் ஏ. பெரேரா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தற்போது நாட்டில் வேகமாக பரவி வரும் டெல்டா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சில வாரங்களுக்கு நாட்டை மூடுமாறு அரச மருத்துவ அதிகாரிகள் மன்றம் அழைப்பு விடுத்துள்ளது.

டெல்டா மாறுபாடு நாடு முழுவதும் வேகமாக பரவி, நாட்டின் வைத்தியசாலை அமைப்பை முடக்குகிறது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

தொற்றாளர்களின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் ஒட்சிசன் மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை, வைத்தியசாலை அமைப்பில் தாங்க முடியாத நிலையை அடைந்துள்ளது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .