2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

நேற்று பதிவானோர் குறித்த தகவல்

Editorial   / 2020 ஜூன் 04 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 66 பேர் நேற்று (03) பதிவாகியுள்ளனர். 

35 பேர் வெளிநாடுகளில் இருந்து வருகைதந்தவர்கள் என்பதுடன், இவர்களில்  14  பேர்  பங்களாதேஷில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய 31 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

கட்டாரிலிருந்து வருகைதந்து தனிமைத்தல் நிலையத்தில் இருந்த 19 பேர் இவ்வாறு தொற்றாளர்களாக பதிவாகியுள்ளதுடன், இருவர் குவைட்டில் இருந்து வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, வைரஸ் தொற்றுக்குள்ளான 902 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருவதுடன், 836 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .