Editorial / 2021 மார்ச் 15 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாணவன் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில், நோர்வூட் தமிழ் மகா வித்தியாலத்தின் 5ஆம் வகுப்பு தற்காலிகமாக மூடப்பட்டது.
அந்த மாணவனுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது நேற்று (14) உறுதிப்படுத்தப்பட்டது. ஆகையால், அப்பாடசாலையின் 5ஆம் வகுப்புக்கான கல்வி நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் 22ஆம் திகதி வரையிலும் ஆரம்பிக்கப்படாது.
நோர்வூட் வாசிகசாலையின் பெண் நூலகருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது. அந்த நூலகரின் மகன், மேற்படி பாடசாலையில் கல்விப்பயின்று வருகின்றார்.
அவருடைய மகன், வலப்பனை தனிமைப்படுத்தல் நிலையத்தின் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago