Editorial / 2020 டிசெம்பர் 13 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்
பொகவந்தலாவை பிரதேசத்தை சேர்ந்த நோர்வூட் த.ம.வி ஆசிரியை ஒருவர் உட்பட அவரது பிள்ளைகள் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதனையடுத்து அவர்கள் மூவரும் கண்டி சுயதனிமை நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இந்நிலையில், குறித்த ஆசிரியையோடு தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையின் அறிக்கையிலே, தரம் ஒன்பதில் கல்வி பயிலும் வெஞ்சர் பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவருக்கும் மாணவி ஒருவருக்கும் தொற்று இருப்பது உறுதியானது .
இவர்களை சுயதனிமை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொகவந்தலாவை பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago