2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

புகைப்பரிசோதனைக்கு புதிய ஒப்பந்தம்

Kanagaraj   / 2015 நவம்பர் 30 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

புகைப் பரிசோதனைக்கென வழங்கப்பட்டிருந்த ஒப்பந்தம், ஏழு வருடங்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டிருந்ததோடு, தற்போது அது காலாவதியாகியுள்ளமையால், புதிய ஒப்பந்தங்கள் கோரப்பட வேண்டுமென, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

புகைப் பரிசோதனை காரணமாக, கொழும்பில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அது அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக, காற்றின் தரம் மிகவும் மோசமானதாகக் காணப்பட்டதாகக் கூறினார்.

புகைப் பரிசோதனைக்கான கட்டணத்தை அதிகரிப்பதற்கு, அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு- செலவுத்திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சர், கட்டண உயர்வினூடாகக் கிடைக்கும் முழுப் பணமுமே அரசாங்கத்துக்கே கிடைக்குமெனவும், பரிசோதனையை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு, பங்குகளெவையும் கிடைக்காது எனவும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X