2025 மே 21, புதன்கிழமை

பேச்சுக்கு ஜனாதிபதி மைத்திரி அழைப்பு

Thipaan   / 2015 டிசெம்பர் 14 , பி.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரவு- செலவுத் திட்ட யோசனைகள் தொடர்பாக அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் மத்தியில் உருவாகியுள்ள கொள்கை ரீதியான எதிர்வாதங்கள் மற்றும் சமூகத்தில் எழுந்துள்ள உரையாடல்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வரவு-செலவுத் திட்டம் தொடர்பில் தொழிற்சங்கத்தினர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் உருவாகியுள்ள கொள்கை ரீதியான கருத்து முரண்பாடுகளுக்கு செவிமடுப்பதற்கும், அது தொடர்பாக கலந்துரையாடுவதற்கும் அதன் பின்னர் இணக்கப்பாட்டுடன் கூடிய தீர்மானங்கள் எட்டப்படுவதன் முக்கியத்துவம்பற்றி ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இதுதொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி ஏற்புடைய தரப்பினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இத்தாலிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 2015 டிசம்பர் மாதம் 16ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .