2025 ஜூலை 31, வியாழக்கிழமை

பா.ஜ.க. துணைத் தலைவரானார் குஷ்பு

Freelancer   / 2025 ஜூலை 31 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் பட்டியலை மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ளார். நடிகை குஷ்பு உள்ளிட்ட 14 பேர் மாநில துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டாவின் ஒப்புதலுடன் தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

மாநில துணைத் தலைவர்களாக எம். சக்கரவர்த்தி, வி.பி. துரைசாமி, கே.பி. ராமலிங்கம், கரு நாகராஜன், சசிகலா புஷ்பா, கனகசபாபதி, டால்பின் ஸ்ரீதர், ஏ.ஜி.சம்பத், பால் கனகராஜ், ஜெயபிரகாஷ், மா.வெங்கடேசன், கோபால்சாமி, குஷ்பு சுந்தர், என். சுந்தர் ஆகிய 14 பேர் நியமிக்கப்படுகிறார்கள். மாநில அமைப்பு பொதுச் செயலாளராக கேசவ விநாயகன் நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .