2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பாடத்திட்டத்தில் தமிழர் வரலாற்றுக்காக விசேட குழு

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 08 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

தமிழ்மொழி மூல வரலாற்றுப் பாடத்திட்டத்தில், தமிழர் தொடர்பான வரலாறு புறக்கணிக்கப்பட்டிருக்கின்றமை தொடர்பில் விசேட குழுவை அமைத்து, அக்குழுவின் தீர்மானத்துக்கு அமைவாக மாற்றங்களைக் கொண்டுவரவுள்ளதாக, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் மூலமாக வெளியிடப்படுகின்ற பாட நூல்களின் (தரம் 6, 7, 8, 9, 10) வரலாறு பாடத்திட்டத்தில், தமிழர் தொடர்பான வரலாறு திட்டமிடப்பட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்றத்தில் அண்மையில் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கான கலந்துரையாடல் கூட்டமொன்று, கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில், செவ்வாய்க்கிழமை (6) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது குறித்து அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், "தமிழ் வரலாற்றுப் பாடத்தில், தமிழர்களின் வரலாறு புறக்கணிக்கப்பட்ட விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு,  மிக விரைவில் ஒரு குழுவை அமைப்பது என இக்கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழுவின் பரிந்துரைக்கு அமைய, மாற்றங்களை கொண்டு வருவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது" என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .