2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

பெண்ணின் கருப்பையிலிருந்து அகற்றப்பட்ட14 கிலோகிராம் கட்டி

Sudharshini   / 2016 மே 14 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்ணொருவரின் கருப்பையிலிருந்து ஆரோக்கியமான 4 குழந்தைகளின் நிறைக்குச் சமமான 14 கிலோகிராம் நிறையுடைய கட்டியொன்றை, கலாவெவ பிரதேசத்திலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றின் மருத்துவர்கள், நேற்று (13) அகற்றியுள்ளனர் என வைத்தியர் ஜகத் ஹேரத் தெரிவித்தார்.

கெக்கிராவ  பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான மேற்படி பெண்ணே, கடந்த 6 மாதங்களாக இந்த அசாதாரண கட்டியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்தக் கட்டி 35 சென்டி மீற்றர் நீளமும் 25 சென்ரி மீற்றர் அகலமும் கொண்டதாகும் எனத் தெரிவித்த டொக்டர் ஹேரத், இச்சத்திர சிகிச்சை இரண்டு மணித்தியாலங்கள் இடம்பெற்றதாகவும் அப்பெண் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X